இந்தியா

எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது: பிரியங்கா காந்தி

எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது: பிரியங்கா காந்தி

Veeramani

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறிய போன் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்திருக்கிறார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், “எங்களுடைய எல்லா போன்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன, எங்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன, கட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன, மாலையில் முதல்வர் அவர்களே சில பதிவுகளை கேட்கிறார்" என்று குற்றம் சாட்டினார்.

அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், "அநேகமாக அகிலேஷ் ஆட்சியில் இருந்தபோது இதேபோன்ற செயலைச் செய்திருக்கலாம். அதனால், அவர் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார்" என தெரிவித்தார்.