இந்தியா

முத்தலாக் தீர்ப்பு மட்டும் போதாது: பொதுசிவில் சட்டம் தேவை என தஸ்லிமா கருத்து

முத்தலாக் தீர்ப்பு மட்டும் போதாது: பொதுசிவில் சட்டம் தேவை என தஸ்லிமா கருத்து

webteam

முத்தலாக் சட்டவிரோதம் என்ற தீர்ப்பால் முஸ்லிம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிடவில்லை என்று வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தஸ்லிமா நஸ்ரின் தனது ட்விட்டர் பக்கத்தில், முத்தலாக் சட்டவிரோதம் என்ற தீர்ப்பால் முஸ்லிம் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. முத்தலாக் என்பது குரானில் இல்லை. முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திரமளிக்க பொது சிவில்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். குரானில் நிறைய அநீதிகளும், சமத்துவமின்மையும் உள்ளன. இன்னும் சில இஸ்லாமிய சட்டங்களை நீக்க வேண்டியுள்ளது. நீங்கள் முஸ்லீம் மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறியவராக இருந்தால், கண்டிப்பாக ஷரியத் சட்டங்களை எதிர்ப்பீர்கள்.

முத்தலாக் தடை சட்டம் இந்தியாவில் தற்போது தான் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானில் 1961 ஆம் ஆண்டே முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டது. வங்க தேசத்திலும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே முத்தலாக் சட்டத்தை ரத்து செய்துவிட்டனர் என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.