உலகில் இந்திய முஸ்லீம்கள் சகல உரிமைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மும்பையை தளமாகக் கொண்ட இந்தி பத்திரிகைக்கு ஒன்றுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அளித்த பேட்டியில் கூறுகையில், ''ஒரு நாட்டின் மக்களை ஆட்சி செய்த ஒரு வெளிநாட்டு மதம் இன்றும் அங்கு உள்ளது என்பதற்கு உலகில் ஏதேனும் உதாரணம் இருக்கிறதா? எங்குமில்லை. இது இந்தியாவில் மட்டுமே உள்ளது. உலகில் இந்திய முஸ்லீம்கள் சகல உரிமைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்தியாவைப் போலின்றி பாகிஸ்தான் மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு உரிமைகளை வழங்கவில்லை, அது இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக உருவாக்கப்பட்டது.
இந்துக்கள் மட்டுமே இங்கு இருக்க முடியும் என்று நமது அரசியலமைப்பு கூறவில்லை; இது அனைவருக்குமான நாடு. உண்மை என்னவென்றால், இந்த நாட்டு மக்களின் மன உறுதியையும் மதிப்புகளையும் நசுக்குவதற்காக கோயில்கள் அழிக்கப்பட்டன. அதனால்தான் கோவில்களை புனரமைக்க வேண்டும் என இந்து சமூகம் நீண்ட காலமாக விரும்பி வருகிறது.
சுயநலத்திற்காக அனைத்து வகையான மதவெறி மற்றும் பிரிவினைவாதம் பரப்புபவர்கள், அதனாலேயே பாதிக்கப்படுவார்கள் என்றார்.