இந்தியா

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்

பிரதமர் மோடிக்கு கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள்

webteam

முத்தலாக் தடை சட்டத்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரதமர் மோடிக்கு கோயில் கட்ட உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி அந்த பெண்கள் அமைப்பின் தலைவர் ருபி கஸ்னி கூறும்போது, இஸ்லாமிய பெண்களுக்கு பிரதமர் மோடி நிறைய செய்துள்ளார். முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது, இலவச வீடு, கேஸ் இணைப்பு உட்பட அவரது பல திட்டங்கள் எங்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளன. இதைவிட வேறு என்ன வேண்டும்?

பிரதமரை உலகம் முழுவதும் பாராட்டி வரும்போது சொந்த மண்ணிலும் பாராட்ட வேண்டும் என்று கோயில் கட்ட முடிவு செய்துள்ளோம். எங்கள் சேமிப்பைப் பயன்படுத்தி இந்த கோயிலைக் கட்ட விரும்புகிறோம். இதற்கான அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். 

இஸ்லாமிய பெண்கள் பிரதமர் மோடிக்கும், அவர் கொள்கைகளுக்கும் ஆதரவாக இருக்கிறோம் என்பதையும் அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்று முத்திரை குத்த வேண்டாம் என்பதையும் உலகுக்குத் தெரிவிக்க இதைச் செய்கி றோம்" என்று தெரிவித்துள்ளார்.