இந்தியா

மோசமான சாலைகளால் விபத்துகள் : பொதுப்பணித்துறை அலுவலகம் சூறை

மோசமான சாலைகளால் விபத்துகள் : பொதுப்பணித்துறை அலுவலகம் சூறை

webteam

மோசமான சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதாக கூறி மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தொண்டர்கள் நவி மும்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். 

மும்பையில் மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து, மகாராஷ்டிர மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டிலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, விபத்துகள் ஏற்பட்டு நிகழும் மரணங்களுக்கு மோசமான சாலைகளை மட்டுமே குறை கூறக்கூடாது என பதிலளித்திருந்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொண்டர்கள் நவி மும்பை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள நாற்காலி, அலமாரி, கணிணி உள்ளிட்டவற்றை அடித்து சேதப்படுத்தினர். அத்துடன் பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்து இருப்பதாக, நவ நிர்மான் சேனா தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினர்.