பாபா சித்திக், ஜீஷன் சித்திக் எக்ஸ் தளம்
இந்தியா

”லிஸ்டில் இவர் பெயரும் இருக்கு”| பாபா சித்திக் படுகொலை.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த புது தகவல்!

Prakash J

மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவின் மூத்த தலைவர்களில் ஒருவருர் பாபா சித்திக். இவர் அக்டோபர் 12ஆம் தேதி, மும்பை பாந்தரா பகுதியில் உள்ள தனது மகன் ஜீஷன் சித்திக்கின் அலுவலகம் அருகே இருந்தபோது அங்குவந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாபா சித்திக் உயிரிழந்தார். இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக ஹரியானாவை சேரந்த குர்மயில் பல்ஜித் சிங் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் கஷ்யப் ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது.

இதனிடையே கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ”பாபா சித்திக் உடன் சேர்ந்து அவரது மகனும் எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக்கையும் கொலை செய்ய திட்டமிட்டோம். அதற்காக பணமும் பெற்றோம். கொலை நடந்த இடத்தில் தந்தையும், மகனும் இருப்பார்கள் என எங்களிடம் தெரிவித்தனர். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், யார் கிடைத்தாலும் கொலை செய்யும்படி தெரிவித்தனர்” இவ்வாறு அவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க: நோபல் பரிசு வென்றதை கொண்டாட மறுத்த தென்கொரிய எழுத்தாளர்! வருத்தமான பின்னணி! உண்மையை உடைத்த தந்தை!

இதற்கிடையே, பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மற்றொருவரை போலீசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். அவர் பிஷ்னோய் கும்பல் கூட்டாளியான சுபம் ராமேஷ்வர் லோங்கரின் சகோதரர் பிரவின் லோங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.முக்கிய குற்றவாளிகளில் மற்றொருவரான ஷிவகுமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பாபா சித்திக்கின் மகன், வந்த்ரே கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். சமீபத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் கட்சிமாறி ஓட்டு போட்டதால் அவரை காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்திருந்தது.

இதையும் படிக்க: அமெரிக்கா | மூன்றாவது முறையாக முயற்சி.. ட்ரம்ப் பிரசாரத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்!