இந்தியா

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது இந்த கும்பலா? - மும்பை போலிஸ் பரபரப்பு தகவல்!

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது இந்த கும்பலா? - மும்பை போலிஸ் பரபரப்பு தகவல்!

JananiGovindhan

சல்மான் கானுக்கு மிரட்டல் கடிதம் வந்தது தொடர்பான வழக்கில், பஞ்சாப்பை சேர்ந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை மும்பை காவல்துறை உறுதி செய்துள்ளது.

பாலிவுட் உச்ச நட்சத்திரமான சல்மான் கானின் தந்தையும் தயாரிப்பாளருமான சலீன் கான் கடந்த ஞாயிறன்று (ஜூன் 5) மும்பையில் பாந்த்ரா கடற்கரையில் வாக்கிங் சென்றிருந்த போது, அங்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

அதில், சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என  குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான விவரம் அறிந்த மும்பை காவல்துறை சல்மான் கானுக்கு உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் சல்மான் கானும் இந்த விவகாரம் தொடர்பாக போலிஸில் புகார் கொடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து போலிஸில் சல்மான் கான் வாக்குமூலமும் அளித்திருந்தார். அதில், “அண்மையில் தனக்கு எவருடனும் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை.

(சல்மான் கான் - லாரன்ஸ் பிஷ்னோய்)

கொலை மிரட்டல் குறித்த எந்த ஃபோன் கால்ஸ் மற்றும் மெசேஜும் வரவில்லை சித்து மூஸ் வாலா படுகொலைக்கு பொறுப்பேற்ற கோல்டி பிரர் பற்றி தெரியாது. ஆனால் லாரன்ஸ் பிஷ்னோய் பற்றி தெரியும்” என கூறியிருந்தார்.

ஏனெனில் கடந்த 2018ம் ஆண்டு ராஜஸ்தான் நீதிமன்றத்தில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்த மும்பை போலீசாருக்கு இந்த மிரட்டல் கடித விவகாரம் குறித்து துப்பு துலங்கியுள்ளது. 

அதன்படி, சல்மானின் தந்தை சலீம் கானுக்கு மிரட்டல் கடிதம் கொடுப்பதற்காகவே ராஜஸ்தானின் ஜலோரில் இருந்து மும்பைக்கு வந்து வேவு பார்த்ததோடு சவுரப் மஹகல் என்ற குற்றவாளியையும் சந்தித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மிரட்டல் கடிதம் அனுப்பியது கனடாவில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய்யின் கூட்டாளியான விக்ரம் பரத் என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மிரட்டல் கடிதம் கொடுத்தவர்கள் அடையாளம் காணப்பட்டதால் அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறோம் என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் இது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் விளம்பர ஸ்டண்ட் என்றும் மும்பை காவல்துறையினர் கூறியுள்ளனர்.

ALSO READ: