டேட்டிங் ஆப்பில் வாடகைக்கு வீடு கேட்டு வலியுறுத்திய கேரள இளைஞரின் பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டு நெட்டிசன்களின் கவனத்தை பெற்று வருகிறது.
காதலிப்பதற்காகவும், காதலர்களை தேடுவதற்காகவும்தான் டேட்டிங் செயலிகளை பயன்படுத்துகிறார்கள் என எண்ணினால் அது சற்று மிகையாகக் கூடும். உண்மையில் டேட்டிங் ஆப்ஸ்களை பொழுதை கழிப்பதற்காகவே பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவரும். சிலர் இதுபோன்ற டேட்டிங் செயலிகளை வேவு பார்ப்பதற்கும் பயன்படுத்துவதும் உண்டு.
இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒரு bumble என்ற டேட்டிங் ஆப்பில் வாடகைக்கு வீடு வேண்டும் எனக் கேட்டு தன்னுடைய bio-ல் குறிப்பிட்டிருக்கிறார்.
டேட்டிங் ஆப்பில் வீடு வாடகைக்கு கேட்டாரா என ஷாக் ஆகவேண்டாம். உண்மையில் மும்பையில் வசித்து வரும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரின் பதிவை Ana de Aamras என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “எனக்கு இந்தி தெரியாது, ஆகவே மும்பையின் வெஸ்டர்ன் லைனில் வாடகைக்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க உதவுங்கள் எனவும், அந்தேரியில் புரோக்கர் செலவு இல்லாமல் வாடகைக்கு வீடு இருந்தால் எனக்கு தகவல் கொடுங்கள். புரோக்கர் சார்ஜ் கேட்டாலும் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார் அந்த நபர்.
இந்த ஸ்கீரின்ஷாட்டை பார்த்த நெட்டிசன்கள், “இது ஒரு சிறந்த யோசனை. டேட்டிங் ஆப்பில் ஒரு நாளைக்கு உங்கள் பயோவை நிறைய பேர் பார்ப்பார்கள். அதன் மூலம் ரூம் மேட் அல்லது பிளாட் மேட்ஸ் உங்களுக்கு கிடைப்பாங்க” என ட்விட்டர் பயனர் பதிவிட்டுள்ளார்.
மேலும், புரோக்கர் சார்ஜை தவிர்க்க மும்பைக்காரர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்றும் மற்றொரு பயனர் குறிப்பிட்டிருக்கிறார்.
வீடு தேடுவது என்பது சாதுர்யமான காரியமல்ல, அதுவும் திருமணமாகாதவர்களாக இருந்தாலும் அந்த கஷ்டத்த வார்த்தையால விவரிக்கவே முடியாது எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.
ALSO READ: