அமேசான் முகநூல்
இந்தியா

“ஆர்டர் செய்தது ரூ.55,000-க்கு செல்போன்.. ஆனால் வந்ததோ...” என்ஜினியருக்கு அமேசானில் வந்த அதிர்ச்சி!

மும்பையில் ஆன்லைனில் வணிக நிறுவனமான அமேசானில் ரூ.55,000க்கு மொபைல் போன் ஆர்டர் செய்த நபருக்கு டீ கப்புகள் வந்ததுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மும்பையில் ஆன்லைனில் வணிக நிறுவனமான அமேசானில் ரூ.55,000க்கு மொபைல் போன் ஆர்டர் செய்த நபருக்கு டீ கப்புகள் வந்ததுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக, ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்தால், அதற்கு பதில் வேறு ஒன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. சைவ உணவிற்கு பதில் அசை உணவு தருவதும், செருப்பிற்கு பதில் இரண்டு செங்கலை தருவது என உதாரணங்களை சொல்லி கொண்டே போகலாம். இது போலதான் மும்பையை சேர்ந்த என்ஜினியருக்கு வந்த டீ கப் கதை.. அவரை போலீசில் புகார் அளிக்கும் அளவிற்கு கோபமடைய வைத்துள்ளது. அது குறித்து காணலாம்.

மும்பையை சேர்ந்த என்ஜினியர் அமர் சவான் என்பவர், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று, இ காமர்ஸ் நிறுவனமான அமேசானில், Techno Phantom V  என்ற மொபைலை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக, ரூ.54,999 பணத்தையும் செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து, இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு அமேசானிலிருந்து பார்சலும் வந்துள்ளது. அப்போது அவர் நினைக்கவில்லை பார்ச்சல் திறந்தால் அவருக்கு உண்டாகப்போவது இன்பம் இல்லை, அதிர்ச்சி என்று!

இந்நிலையில், பார்சலை திறந்து பார்த்த அமர் சவான், அதில், செல்போனுக்கு பதில் ஆறு தேநீர் அருந்தும் கோப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, அமேசான் மற்றும் விற்பனையாளர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார். ஆனால், அவர்களிடமிருந்து சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்த அமர், அமேசான் நிறுவனம் தனக்கு மோசடி செய்துள்ளது என்ற அடிப்படையில் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன்பின்னர், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து முதல் அறிக்கை தாக்கசெய்யப்பட்டது. மேலும், இது தொடர்பான விற்பனையாளர்களிடத்திலும் போலீசார் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.