மும்பை எக்ஸ் தளம்
இந்தியா

மும்பை | சிகிச்சைக்காக 3 மணி நேரம் காத்திருப்பு... சிகிச்சை அளிக்காத மருத்துவரால் ஒருவர் மரணம்!

மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் ஒருவர், மருத்துவ சிகிச்சைக்காக சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

மும்பையைச் சேர்ந்த மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரான அனிஷ் கைலாஷ் சவுகானுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்குள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அவர். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் அவரை உடனே பரிசோதிக்கவில்லை.

கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இறுதியில் மருத்துவமனையில் இருந்த பயிற்சியாளர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளிக்க அனுப்பப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததால் அந்த நபர் இறந்துபோனார். இதனால் கோபமடைந்த அவரது உறவினர்களும் நண்பர்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அனிஷின் இறப்புக்கு மருத்துவர்களே காரணம் எனவும் குற்றஞ்சாட்டினர். மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: ஒலிம்பிக் கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்தாரா அன்டிம் பங்காலின் சகோதரி? உண்மையில் நடந்தது என்ன?