ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனரும், அதன் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு.
கடந்த 2018இல் அலிபாக் பகுதியை சேர்ந்த கட்டிட வல்லுநர் அன்வாய் நாயக் என்பவரும், அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு காரணம் அர்னாப் தான் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. விசாரணைக்கு பிறகு அந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கை மீண்டும் தூசு தட்டிய மகாராஷ்டிரா போலீசார் அர்னாப் மற்றும் இருவரை கடந்த 4ஆம் தேதி கைது செய்தது.
மாஜிஸ்ரேட் முன்னிலையில் போலீசார் ஆஜர் படுத்திய நிலையில் அர்னாபை நவம்பர் 18 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அதனையடுத்து அவர் தற்போது சிறையில் வைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்குமாறு நீதிமன்றத்தில் அவர் மனு கொடுத்திருந்த நிலையில் அதை தள்ளுபடி செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம்.