மும்பை கல்லூரி fpj
இந்தியா

கல்லூரியில் பாஜக மீட்டிங்.. கலந்துகொள்ள மாணவர்கள் எதிர்ப்பு.. ஐடி கார்டுகளைப் பறித்து கண்டிப்பு!

மும்பை கண்டிவாலியில் உள்ள தாக்கூர் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, அங்கே பயிலும் மாணவர்களை பாஜக பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பரப்புரையில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இம்மாநிலத்தில் மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் களம் காண உள்ளார். அதற்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தன் தந்தையை வெற்றிபெற வைக்கும் நோக்கில் அவரது மகன் துருவ் கோயலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவர், மும்பை கண்டிவாலியில் உள்ள தாக்கூர் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, அங்கே பயிலும் மாணவர்களை பாஜக பொதுக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, மக்களவைத் தேர்தலுக்காக புதிய வாக்காளர்களைக் கவர்வதற்காகவும் அதில் பாஜகவின் சாதனைகள் குறித்துப் பேசுவதற்காகவும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தை அந்தக் கல்லூரி நிர்வாகம் மத்திய அமைச்சர் மகன் துருவ் கோயலின் பேரில் கல்லூரி வளாகத்திலேயே ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அந்தக் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கல்லூரி நிர்வாகமும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: 2009-ல் தொடங்கிய பயணம்..தவிர்க்க முடியாத இடத்தில் 'நாம் தமிழர் கட்சி’ - சிக்கலாகுமா சின்னம் பிரச்னை?

மேலும், மாணவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேறாதவண்ணம் வழிகளை மூடியதுடன், அவர்களின் அடையாள அட்டைகளையும் பறித்துவைத்ததாகக் கூறப்படுகிறது. இத்தனைக்கும் நடுவில் அந்த மாணவர்களுக்கு அடுத்த நாள் தேர்வு நடைபெறுவதாக இருந்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்குச் சென்றபின்புதான் அந்த மாணவர்களுக்கே, இது கட்சி மீட்டிங் என தெரிய வந்துள்ளது.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தவிர, இந்த நிகழ்வை முன்கூட்டியே கல்லூரி நிர்வாகம் தங்களிடம் தெரிவிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்களைக் கல்லூரி நிர்வாக முதல்வர் கண்டித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: மக்களவை தேர்தல் 2024 | தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு... விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டி!