மும்பை முகநூல்
இந்தியா

மும்பை|’ஏழைகளுக்குநீதி கிடைக்குமா?’காரில் 100மீ இழுத்து செல்லப்பட்டு உயிரைவிட்ட தாய்; கதறிஅழும் மகள்

மும்பையில் அதிவேகமாகமாக வந்த கார் மோதி, இழுத்துசெல்லப்பட்டதில் நக்வா என்ற பெண் பரிதாபாக உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு காரணமான சிவசேனாவை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

மும்பையில் அதிவேகமாகமாக வந்த கார் மோதி, இழுத்துசெல்லப்பட்டதில் நக்வா என்ற பெண் பரிதாபாக உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு காரணமான சிவசேனவை சேர்ந்த ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜீலை 7 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் மும்பை சூசன் துறைமுகப்பகுதியிலிருந்து மீன் வாங்கி கொண்டு பிரதீப் மறறும் நக்வா என்ற தம்பதியினர் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளனர். அப்போது அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று, தம்பதியின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதனால், 100 மீ வரை இழுத்து செல்லப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இப்பெண்ணின் கணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்பிறகு, விபத்தை ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளர் பால்கரின் உள்ளூர் சிவசேனா (ஷிண்டே அணி) தலைவருமான ராஜேஷ் ஷா கைது செய்யப்பட்டார். பின்னர் கார் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத்தையும் போலீசார் வழியில் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திலேயே ராஜேஷ் ஷா ரூ. 15 ஆயிரம் அபராதம் கொடுத்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத் மட்டுமே சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தவே, விபத்து ஏற்படுத்தியது யார்? எப்படி நடந்தது என்ற திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மிஹிர் ஷா - நக்வா

சம்பவ தினத்தன்று நடந்தது என்ன?

ராஜேஷ் ஷாவின் 24 வயது மகனான மிஹிர் ஷா சம்பவ தினத்தின் முந்தைய நாள் இரவில், இரவு 11 மணி அளவில், பிஎம்டபிள்யூ காரை எடுத்துக்கொண்டு பார்டிக்கு சென்றுள்ளார். அங்கு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதையில் நள்ளிரவு 1 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார்.

பிறகு, மீண்டும் அதிகாலை 4 மணி அளவில் அவரின் கார் ஓட்டுரையும் அழைத்து கொண்டு காரை அதிவேகமாக இயக்கியுள்ளார். பிறகு, காலை 5 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது தான், அதே சாலையில் கணவன் - மனைவியான பீரதீப் மற்றும் நக்வா ஆகிய இருவரும் மீன் வாங்கி விட்டு இருசக்கரவாகனத்தில் வீடுதிரும்பியுள்ளனர்.

அப்போதுதான், காரில் அதிவேகமாக வந்த மிஹிர் ஷா இருசக்கரவாகனத்தில் வந்த தம்பதிகளின் மீது மோதியுள்ளார். இதனால்,வாகனத்தில் வந்த நக்வா 100 மீ இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இதன் பிறகு, காரை நிறுத்தாமல் ஓட்டிய மிஹிர் ஷா, கலா நகர் பகுதியில் காரை நிறுத்தி காரை ஓட்டுமாறு அருகில் இருந்த ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத்திடம் அவரின் அருகில் இருந்த இருக்கையில் மிஹிர் ஷா அமர்ந்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக தனது தந்தை ராஜேஷ் ஷாவை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜேஷ் ஷா தனது மகனை ஆட்டோவில் அங்கிருந்து புறப்பட வைத்துள்ளார். பிறகு போலீசாரின் கண்களின் சிக்கும்படி, கார் ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத்தை காரை ஓட்ட வைத்துள்ளார்.

இதன்மூலம், தனது மகன் செய்த தவறை மறைக்க முயன்றுள்ளார் ராஜேஷ் ஷா என்றும், நக்வாவை விபத்துக்குள்ளாக்கிய மிஹிர் ஷா என்றும் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அறிந்து கொண்ட காவல்துறையினர் கடந்த மூன்று நாட்களாக மிஹிர் ஷாவை தேடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், அவரின் செல்போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டநிலையில், அவர் எங்கே தலைமறைவாகி இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கவில்லை. மேலும், இதற்காக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்ட் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில்தான், நேற்று (9.7.2024) பிற்பகல் போலீசார் மிஹிர் ஷாவை கைது செய்துள்ளனர். தாய் மற்றும் மனைவி இழந்த நக்வாவின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரை மனம் கலங்க வைத்துள்ளது.

அம்ருதா

இந்நிலையில், தாயை இழந்த நக்வானின் மகள் அம்ருதா கண்கள் கலங்க, ‘அம்மாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார். அதில்,”என் அம்மாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்த போது அவர் மிகுந்த வலியால் துடித்ததை என் கண்களால் பார்த்தேன். எனது அம்மாவை கொலை செய்தவருக்கு மரண தண்டனை கிடைக்கவேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து நக்வாவின் கணவர் பிரதீப் நக்வா தெரிவிக்கையில்,

பிரதீப் நக்வா - நக்வா

”விபத்தை ஏற்படுத்திய மிஹிர் ஷா காரின் நம்பர் பிளேட்டை உடைத்துவிட்டார். இவர் கைது செய்யப்பட்டு சிறை செல்வார். பிறகு நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் வெளியில் வருவார். பிறகு, மது அருந்தியதற்கான தடயங்கள் இருக்காது. அவருடன் 20 வழக்கறிஞர்கள் இருப்பார்கள்.

இந்த அரசியல் கட்சி தலைவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். என்ன நடந்தது என்பதை அறிய ஃபட்னாவிஸ் அல்லது ஷிண்டே எங்கள் வீட்டிற்கு வந்தார்களா? அஜித் பவார் வந்தாரா?"நாங்கள் ஏழைகள் எங்களுக்கு யார் நீதி வழங்குவார்கள். ?” என்று மனம் வெதும்பி அழுதுள்ளார்.

தாய் மற்றும் மனைவி இழந்த நக்வாவின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரை மனம் கலங்க வைத்துள்ளது.

இது போன்று மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது புதிதல்ல.. சில நாட்களுக்கு முன்பு கூட , 17 சிறுவன் மது அருந்திவிட்டு காரை ஓட்டி இருவரின் உயிரை பறித்தார். அவரை காப்பாற்ற பணபலம் கொண்டு இவரின் குடும்பம் செய்த செயலும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.