மும்பை விமான நிலையம் ஏப்ரல் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆறு மணி நேரம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிசியான விமான நிலையங்களில் மும்பை விமான நிலையமும் ஒன்று. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
விமான ஓடுபாதை உள்ளிட்ட பல இடங்களில் பரமாரிப்பு பணிகள் செய்யப்பட இருப்பதால் ஏப்ரல் மாதம் 9 மற்றும் 10 ம் தேதிகளில் ஆறு மணி நேரம் விமான நிலையம் மூடப்படும். அதே போல அக்டோபர் 23-ம் தேதியும் ஆறு மணி நேரம் இதே காரணங்களுக்காக, விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.