மும்பை விமான நிலையம் பராமரிப்பு பணிக்காக 22 நாட்கள் மூடப்படுகிறது.
நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் மும்பை. டெல்லியை அடுத்து, எப்போதும் பரபரப்பாக இயங்கும் இந்த விமான நிலையத்தில் தினமும் 970 விமானங்கள் வந்து செல்கின்றன. மெயின் ஓடு தளத்தில் மணிக்கு 48 விமானங்களும், இரண்டாவது ஓடுதளத்தில் 35 விமானங்களும் கையாளப்பட்டு வருகின்றன.
ஓடுதளத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிக்காக பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 30 ஆம் தேதி வரை வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என 22 நாட்கள் விமான நிலையம் மூடப்படுகிறது. மார்ச் 21 ஆம் தேதி ஹோலி பண்டிகை என்பதால் அந்த வியாழக் கிழமை அன்று விமான நிலையம் செயல்படும்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை, 6 மணி நேரம் மூடப்பட இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.