இந்தியா

‘தண்டவாளம் சூடா! இலையை வாரி போடுங்க’ மும்பையிலும் ஒரு விஞ்ஞானி..

‘தண்டவாளம் சூடா! இலையை வாரி போடுங்க’ மும்பையிலும் ஒரு விஞ்ஞானி..

webteam

மும்பையில் வெயில் வெப்பத்தால் வளைந்த ரயில் தண்டவாளத்தை அதிகாரிகள் சிலர் இலைகளை கொண்டு மூடியுள்ளனர். 

கோடைக்காலம் என்பதால் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அதன்படி மும்பையில் வெயிலின் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டுவிட்டது. இதில் மும்பை நகரின் பாட்லாபூர் மற்றும் அம்பெர்நாத் இடையேயான தண்டவாளம் வெப்பம் தாங்கமால் வளைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வந்த ரயில்கள் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டன. 

பின்னர் ரயில்வேதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சீர் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. அப்போது ரயில் தண்டவாளத்தின் வெப்பத்தை குறைக்க ஒரு அதிகாரி தந்த ஐடியா, பயணிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவர் அங்கிருந்த ஒரு மரத்தின் இலைகளை பறித்து, தண்டவாளத்தின் மீது குவிக்க சொல்லியுள்ளார். அதை ஊழியர்கள் செய்துள்ளனர். இதைக்கண்ட பயணிகள் தங்களுக்குள் கிண்டல் செய்து சிரித்துள்ளனர். ஏனெனில் கொஞ்ச நேரத்தில் காற்றில் இலைகள் எல்லாம் பறக்கத்தொடங்கியுள்ளன. பின்னர் தண்டவாளங்கள் முறைப்படுத்தப்பட்டு ரயில் புறப்பட்டுச்சென்றது.