இந்தியா

எம்.எஸ்.சுப்புலட்சுமி படம் போட்ட புதிய நூறு ரூபாய் நோட்டு

webteam

பழம்பெரும் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி படம் போட்ட100 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நோட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ் சுப்புலட்சுமி. இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அவரை கவுரவுக்கும் விதத்தில் அவரது படம் பொறித்த ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.
கர்நாடக இசைத்துறையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் காலத்தால் சாகா வரம் பெற்றவை. ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ என்ற பாடல் ஒலிக்காத இல்லங்களே இல்லை. அந்தளவுக்கு பக்தி இசையோடு கலந்தவர் சுப்புலட்சுமி. 
இதே போல ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல் பெரும் புகழை அவருக்கு சம்பாதித்து கொடுத்தது. 
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சினிமாவில் நடித்தும் உள்ளார். அவர் நடித்த ‘மீரா’ படத்தை எல்லீஸ் டங்கன் இயக்கி இருந்தார். கல்கி சதாசிவத்தை மணந்து கொண்ட இவர் தேசிய விடுதலைக்காகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஐ.நா. சபையில் இசைக் கச்சேரி நிகழ்த்திய ஒரே இந்தியர் இவர்.
இவரது நூற்றாண்டை ஒட்டிதான் மத்திய அரசு அவரது உருவம் பதித்த நோட்டுக்களை வெளியிட்டதன் மூலம் கர்நாடக இசைக்கும் தமிழ்நாட்டின் பெருமைக்கும் உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது என இசைத்துறையினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.