model image x page
இந்தியா

மத்தியப் பிரதேசம்| மாமியாரை 95 முறை கத்தியால் குத்திய மருமகள்.. மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!

மத்தியப் பிரதேசத்தில் மாமியாரைக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு ரேவா மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அத்ரைலா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் கோல் (50). இவரது மருமகள் காஞ்சன் கோல் (24). கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி இவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் கோபமடைந்த காஞ்சன், மாமியார் சரோஜ் கோலை சரமாரியாகக் கத்தியால் குத்தியுள்ளார்.

அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல. 95 முறை கத்தியால் குத்தியுள்ளார். பின்னர், காயம்பட்ட தன் தாயை, சரோஜ் கோலின் மகன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: தமிழக பாஜகவில் உட்கட்சி பூசலா? மேடையில் தமிழிசையைக் கண்டித்த அமித் ஷா.. #ViralVideo

இந்த விவகாரம் குறித்து உடனே போலீசாருக்கும் சரோஜ் கோலின் மகன் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் காஞ்சன் கோலை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரேவா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த நான்காவது கூடுதல் அமர்வு நீதிபதி பத்மா ஜாதவ், காஞ்சனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நீதிபதி

இந்த வழக்கில், உயிரிழந்த சரோஜ் கோலின் கணவர் வால்மீக் கோலின் பெயரும் முதலில் சேர்க்கப்பட்டு, பின்னர் ஆதாரங்கள் இல்லாததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடுவானில் குலுங்கிய விமானம்| பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு.. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!