எம்.பி.ராகுல் காந்தி - பிரதமர் மோடி ஃபேஸ்புக்
இந்தியா

"மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்"- எம்.பி.ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டி ராகுல் காந்தி தனது x தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில், ’மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான்’ என்று பதிவிட்டுள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரதமர் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டி ராகுல் காந்தி தனது x தளத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில்,’மோடி ஆட்சியில் ரயிலில் செல்வதே தண்டனைதான் என்று பதிவிட்டுள்ளது’ பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாக மாறியுள்ளது. சாதாரண ரயிலில் பொதுப் பெட்டி எண்ணிக்கையை குறைத்து எலைட் ரயில்களை மட்டுமே மோடி அரசு ஊக்குவிக்கிறது. எலைட் ரயில்களை ஊக்குவிக்கும் மோடி அரசால் அனைத்து பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளைப் பெற்றும், இருக்கைகளில் மக்கள் வசதியாக உட்கார முடியவில்லை. சாமானியர்கள் தரையில் அமர்ந்தும் கழிப்பறையில் பதுங்கியும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.சாமானியர்களின் பயணத்தைக் காப்பாற்ற ரயில்வே துறையை அழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்.” என்று காங்.எம்.பி.ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.