எம்.பி. கணேசமூர்த்தி புதிய தலைமுறை
இந்தியா

எம்.பி. கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது? விபரீத முடிவுக்கு தள்ளப்பட்டது ஏன்?

கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தன் வீட்டில் நேற்று தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

ஈரோடு பெரியார் நகரில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (77) தனது மகன் கபிலனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்தனர்.

தொடர்ந்து கணேசமூர்த்தி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். கணேசமூர்த்தி கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

முழு விசாரணைக்கு பிறகே தற்கொலை முயற்சிக்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர், கணேசமூர்த்தியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.