பாலியல் வன்கொடுமை கோப்பு படம்
இந்தியா

ம.பி | தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 13 வயது சிறுவன்! கொலையை மறைக்க உதவிய தாய்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுவன் தனது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதும் அதனை மறைக்க அச்சிறுவனின் தாய் மற்றும் மற்ற சகோதரிகளே உதவியதும் நடந்துள்ளது.

சண்முகப் பிரியா . செ

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 13 வயதான சிறுவனொருவர் தனது தாய், தந்தை, இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு இளைய சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். அச்சிறுவன் கடந்த 24ம் தேதி இரவு வழக்கம் போல தனது இளைய சகோதரியுடன் தூங்கச் சென்றுள்ளார். அப்போது தனது அலைபேசியில் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். பார்த்ததோடு மட்டுமல்லாமல் அருகே உறங்கிக் கொண்டிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி தனது தந்தையிடம் சொல்லப்போவதாகக் கூறவே பயத்தில் அவரைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயன்றுள்ளார். பின் தனது தாயிடம் சென்று நடந்த விஷயத்தைக் கூறியுள்ளார். அவரது தாய் வந்து சிறுமியைப் பார்க்கும்போது அவர் மூச்சுத் தினற அழுதுகொண்டு இருக்கவே அச்சிறுவன் தனது தாயின் கண் முன்னே மீண்டும் அச்சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட மூத்த சகோதரிகள் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இதைக்கண்ட அந்த தாய், தன் பிற மகள்கள் உதவியோடு, இறந்து கிடந்த இந்த மகளை வீட்டின் முற்றத்தில் போட்டுள்ளார்.

பின் அக்கப்பக்கத்தினர் சிறுமியின் உடலைக் கண்டு போலீசாருக்குத் தகவல் அளிக்கவே தகவல் அறிந்து வந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது போலீசாரிடம் சிறுமி விஷப் பூச்சி கடித்து இறந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால் பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவரவே போலீசார் விசாரணையைத் தீவிரப் படுத்தியுள்ளனர்.

சிறார் சட்டங்கள்

அப்போது அச்சிறுமியின் குடும்பத்தினர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, சந்தேகமடைந்த போலீசார் வீட்டைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் சம்பவத்தன்று வேறு யாரும் வீட்டிற்கு வரவில்லை என்பதும், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் நேரத்தில் எந்த சத்தமும் கேட்கவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது. இதனால் மீண்டும் குடும்பத்தாரிடம் போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்துள்ளனர். அப்போது அவக்ரள் நடந்த உண்மையை ஒத்துக் கொண்டுள்ளனர்.

பின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் தாயையும் முதல் சகோதரியையும் சிறைக்கு அனுப்பிவிட்டு 18 வயதுக்குக் கீழ் உள்ள மற்ற சகோதரியையும் இச்சிறுவனையும் சிறார் சிறையில் அடைத்துள்ளனர். 13 வயது சிறுவன் தனது 9 வயது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.