இந்தியா

மோட்டோவில் ஒரு பட்ஜெட் போன்: Motorola மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் அம்சங்கள் என்ன?

மோட்டோவில் ஒரு பட்ஜெட் போன்: Motorola மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் அம்சங்கள் என்ன?

EllusamyKarthik

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E7 பவர் ஸ்மார்ட்போன் வரும் 19ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது. இது இ - காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் லிஸ்டிங்கில் உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னதாகவே இரண்டு E7 சீரிஸ் போன்களை மோட்டோரோலா நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகும் E7 பவர் போன் அந்த இரண்டு மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் இருக்கின்ற வகையில் வடிவமைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5000 மில்லியாம்ப் பேட்டரி, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 6.5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்ட் 10, மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட், மைக்ரோ USB போர்ட் மாதிரியானவை இந்த போனில் இடம்பெற்றுள்ளன. 

பட்ஜெட் ரக போனாக இந்த போன் வெளியாக உள்ளது. இந்தியாவில் இந்த போனின் விலை 10000 ரூபாய்க்கும் கீழ் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.