இந்தியா

விதிமுறையை மீறுபவர்களுக்கு கிடுக்குப்பிடி! கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்

விதிமுறையை மீறுபவர்களுக்கு கிடுக்குப்பிடி! கடுமையாகும் மோட்டார் வாகனச் சட்டம்

webteam

விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்துக்கும், காயமடைவோருக்கும் இழப்பீடு வழங்கும் வகையில் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்களைக் குறைக்க மோட்டார் வாகனச் சட்டத்தை மேலும் கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிக தொகையை அபராதமாக விதிப்பது, ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற மாற்றங்களை உள்ளடக்கிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. 

இதுதொடர்பாக, பேசிய மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த முறையே இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியும், மாநிலங்களவையில் நிலுவையிலிருந்ததாகக் குறிப்பிட்டார். போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், விபத்துகள் 3 முதல் 4 சதவிகிதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் மட்டும் 1‌5 சதவிகிதம் விபத்துகள் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். 

எனவே, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, வாகன விபத்தை ஏற்படுத்தும் உரிமையாளர் அல்லது காப்பீட்டு நிறுவனம், விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவருக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.