மேற்கு வங்கத்தில் தேயிலைத்தோட்டத்தில் இறந்து கிடந்த யானைக்குட்டியின் உடலை, தாய் யானை கண்ணீருடன் தூக்கிச் செல்லும் கலங்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி (jalpaiguri) என்ற பகுதியில், அம்பாரி தேயிலைத் தோட்டமொன்று உள்ளது. இத்தோட்டத்தில் யானைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. அந்த யானைக்குட்டி எப்படி இறந்தது என்பது தெரியவராத நிலையில், குட்டியை தேடிக்கொண்டு அங்கு தாய் யானை வந்தது. குட்டியை உயிரற்ற நிலையில் கண்ட அந்த தாய் யானை, கண்ணீர் பொங்க குட்டியின் உடலை தும்பிக்கையால் தூக்கியது.
வனத்துறையினர் தாய் யானையை விரட்ட முயன்றும் குட்டியின் உடலை தும்பிக்கையில் ஏந்தியபடி தாய் யானை அந்த இடத்தை விட்டு வெளியேறியது. இந்தக் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
தொடர்ந்து யானைக்குட்டி இறப்பின் காரணம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இந்தியாவில் யானைகள் இறப்பு அதிகரிப்பது, காடுகளின் அழிவையே குறிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க... 15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழப்பு - காரணங்கள் என்ன?