இந்தியா

வெளிநாடுகளில் சொத்துகளை பதுக்கிய 300 இந்திய பிரபலங்கள்? - ஆய்வில் அம்பலம்

வெளிநாடுகளில் சொத்துகளை பதுக்கிய 300 இந்திய பிரபலங்கள்? - ஆய்வில் அம்பலம்

JustinDurai
இந்தியாவைச் சேர்ந்த 300க்கும் அதிகமான முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துகளை பதுக்கி வைத்திருப்பது அம்பலமாகியுள்ளது.
பிபிசி, தி கார்டியன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட உலகின் 150 ஊடக நிறுவனங்கள் அடங்கிய புலனாய்வு பத்திரிகையாளர் அமைப்பு, PANDORA பேப்பர்ஸ் என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சுமார் 12 மில்லியன் ஆவணங்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் எம்பிக்கள், தொழிலதிபர்கள், முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உட்பட 300க்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் சொத்துகளை பதுக்கியது தெரியவந்திருப்பதாக அந்த அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
பாப் பாடகி ஷாகிரா, ஜோர்டான் மன்னர், கென்யா, உக்ரைன் அதிபர்கள், முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோரும் சட்ட விரோதமான முறையில் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்திருப்பதாக சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் அமைப்பின் ஆய்வில் குற்றஞ்சாட்டப்படுகிறது. புகாருக்கு ஆளான பலரும், வெளிப்படையான முறையிலேயே வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியிருப்பதாக விளக்கமளித்துள்ளனர்.