நடப்பு நிதியாண்டின் மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக் கட்டத்தில் சுமார் 40 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக CMIE என்ற அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலங்களில் 40 கோடியே 49 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதேகாலத்துடன் ஒப்பிடுகையில் 25 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த திறன் தேவையுடனான வேலைவாய்ப்புகளே அதிகமாக உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள CMIE, வேளாண் துறையில் தான் 84 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பது ஆரோக்கியமான வளர்ச்சிதான் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.