25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிகளவு பருவமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரண்டு வகையான பருவமழை காலங்கள் உண்டு. ஒன்று; தென்மேற்கு பருவமழை. இரண்டு; வடகிழக்கு பருவமழை. தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். இந்தக் காலத்தில் தான் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். அந்தவகையில் இந்தாண்டு தென் மேற்கு பருவமழை கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. ஜூலை மாதம் பருவமழை வழக்கத்தைவிட 33 சதவிகிதம் குறைவாக பதிவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் பருவமழை தீவிரம் அடைந்தது. அந்த மாதம் வழக்கத்தைவிட 33 சதவிகிதம் அதிக மழை பதிவாகியது. அதேபோல ஆகஸ்ட் மாதம் 15 சதவிகிதம் அதிகமான மழை பதிவானது. செப்டம்பரில் மட்டும் நாடு முழுவதும் சராசரியாக 24.71 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் அளவை விட 48 சதவிகிதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
1917ம் ஆண்டுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்தது இந்தச் சூழல் தென் மேற்கு பருவமழை காலம் இன்று உடன் நிறைவு பெறுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகளவிலான மழை இந்தாண்டு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.