இந்தியா

குஜராத்திலும் மர்ம உலோகத்தூண் - ஏலியனா? மனித செயலா?

EllusamyKarthik

உலகம் முழுவதுமே மர்ம உலோகத்தோன் ஆள் அரவமற்ற பகுதிகளில் இருந்து அண்மைய காலமாக கண்டெடுக்கப்பட்டு வருகிறது. மலை, பாலைவனம், அடர்ந்த வனம் மாதிரியான இடங்களில் இந்த மர்ம உலோகத்தூண் பீதியை கிளப்பி வந்தது. செங்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள இந்த தூணை கண்டு ‘இது ஏலியன்களின் வேலையாக இருக்கலாம்’ எனவும் தெரிவித்திருந்தனர் நெட்டிசன்கள். 

இந்நிலையில் இதே மாதிரியான மர்ம உலோகத்தூண் ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்குள்ள பூங்கா ஒன்றில் இந்த தூண் நிறுவப்பட்டுள்ளது. தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பனி வனப்பூங்காவில் இந்த மர்ம உலோகத்தூண் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த தூணை நிறுவுவது மனிதர்கள் தான் எனவும் சொல்லப்படுகிறது. 

நன்றி : இந்தியா டுடே