இந்தியா

“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்

“அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார் மோடி” - காங். விமர்சனம்

webteam

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டோம் என உணர்ந்து விட்ட மோடி பாலிவுட்டில் புதிய வேலையை தேடும் முயற்சியில் இறங்கிவிட்டார் என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரு‌டன் பிரதமர் மோடி தன்‌ இல்லத்தில் க‌லந்துரையாடினார். அப்போது பல்வேறு விஷயங்களை அக்‌ஷய் குமாருடன் பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார்.

இந்தக் கலந்துரையாடலின்போது, மேலும் தன்னுடைய இளமைகால நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடியின் கலந்துரையாடலுக்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மோடியின் கலந்துரையாடல் குறித்து  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ''இந்தியாவில் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளின் எதிர்காலத்தை தனது தவறான முடிவுகளால் கெடுத்த மோடி, அடுத்து பாலிவுட்டில் நடிகராக முயற்சிக்கிறார்.

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு பிரதமராக இருக்க மாட்டோம் என உணர்ந்து விட்ட மோடி பாலிவுட்டில் புதிய வேலையை தேடும் முயற்சியில் இறங்கிவிட்டார். அவர் அக்‌ஷய் குமாரை விடவும் சிறந்த நடிகராக முயற்சி செய்கிறார். ஒரு அரசியல்வாதியாக தோல்வியடைய போவதைப் போல திரைப்படத் துறையிலும் அவர் தோல்விதான் அடைவார்'' என்று தெரிவித்துள்ளார்.