பிரதமர் மோடி உரை புதிய தலைமுறை
இந்தியா

“இந்தியர்களை சோம்பேறிகளாக கருதினார் நேரு..” - பிரதமர் மோடி விமர்சனம்

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியர்களை சோம்பேறிகளாக கருதியதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

PT WEB

மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர், 1959ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் அப்போதைய பிரதமர் நேரு டெல்லி செங்கோட்டையில் பேசியதை மேற்கோள் காட்டினார்.

நேரு - மோடி

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களை ஒப்பிடும் போது இந்தியர்களிடம் கடின உழைப்பு இல்லை என நேரு கூறியுள்ளார்.

இந்தியர்களை சோம்பேறிகள் மற்றும் புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் என நேரு கருதினார். நேருவை போலவே அவரது மகள் இந்திரா காந்தியும் ஒரே எண்ணம் கொண்டிருந்தார். நேரு செய்த தவறுக்கு ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிக விலை கொடுத்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்த பின் ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலா மேம்பட்டுள்ளது. ஜி20 மாநாடு அங்கு நடைபெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.