இந்தியா

வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை படைக்க வேண்டும் - பிரபலங்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோடி!

வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை படைக்க வேண்டும் - பிரபலங்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோடி!

webteam

மக்களவை தேர்தலில் வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை படைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

மத்திய அரசு இணையதளங்களிலிருந்து பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் படங்களும் அகற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு அலுவலகங்களில் பிரதமர், அமைச்சர்களின் படங்கள் மறைக்கப்பட்டும் அகற்றப்பட்டும் வருகின்றன. அந்தந்த கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பரப்புரையை தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை படைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒவ்வொருவருக்கு தனித் தனியாக ட்விட் செய்துள்ளார். அதில், வரும் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் வாக்களிப்பது என்பது உரிமை மட்டும் அல்ல; கடமையும் கூட எனவும் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக அரசியல் தலைவர்கள் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, அகிலேஷ்யாதவ், தேஜஸ்வி யாதவ், மு.க.ஸ்டாலின், நவீன் பட்நாயக், ஹெ.டி.குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி, நிதிஷ் குமார், ராம் விலாஸ் பஸ்வான்,  மற்றும் திரை பிரபலங்கள் மோகன்லால், நாகர்ஜூனா, ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, ஆலியா பட், அனுஷ்கா சர்மா, சல்மான் கான், அமீர் கான்,

அமிதாபட்சன், சாரூக்கான், கரண் ஜோகர், பாடகர்கள் லதா மகேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் மகாதேவன்,  விளையாட்டு வீரர்கள் நீரஜ் சோப்ரா, யோகேஷ்வர் தத், சுசில் குமார், பி.வி.சிந்து, சாய்னா நேவல், சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, விவிஎஸ் லஷ்மணன், வீரேந்திர சேவாக், விராட் கோலி, மகேந்திரசிங் தோனி, ரோகித் சர்மா என பல்வேறு பிரபலங்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.