உலகமே மின்னணு பணப் பரிமாற்றத்தை செயல்படுத்திக் கொண்டிருக்க, இந்தியா மட்டும் அதில் பின்தங்கியிருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் மங்களூருவில் பேசிய பிரதமர், அளவற்ற ரொக்க கைமாற்றங்களால் கறுப்புப் பணம் குவிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்திலேயே மின்னணு பரிமாற்ற முறையை அரசு ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர், டிசம்பரில் நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி பிரபலங்கள் பலர், ஏழை நாடான இந்தியாவில் எப்படி மின்னணு பரிமாற்றம் சாத்தியம் என்று கேட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இப்போது கிராமங்களில் சுயஉதவிக் குழு உள்ளிட்ட பெண்களும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தவது, எதிர்க்கட்சியினரின் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது என பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். அத்துடன் உலகமே மின்னணு பணப் பரிமாற்றத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போது, இந்தியா மட்டும் அதில் பின்தங்கியிருக்க முடியாது என்றுm அவர் சுட்டிக்காட்டினார்.