இந்தியா

மோடியின் அரசியல் லாபத்துக்காக காஷ்மீரில் அப்பாவிகள் பலி: ராகுல் காந்தி

webteam

மோடி தனது அரசியல் லாபத்துக்காக காஷ்மீரில் பி.டி.பி. உடன் ஏற்படுத்திய கூட்டணியால் இந்தியாவில் மோசமான விளைவுகள் ஏற்பட்டு வருகின்றது என்றும், மோடியின் கொள்கைகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அமர்நாத் புனிதப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் லாபத்திற்காக மோடி ஏற்படுத்திய கூட்டணியானது இந்தியாவிற்கு மோசமான விளைவுகளைத் தந்துள்ளதாகக் கூறியுள்ளார். மோடியின் நடவடிக்கைகளால் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதோடு, அப்பாவி இந்திய மக்கள் ரத்தம் சிந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும், “சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் மோடி மவுனம் காப்பது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.