இந்தியா

மன்மோகன் விமான செலவைவிட மோடியின் செலவு குறைவு

மன்மோகன் விமான செலவைவிட மோடியின் செலவு குறைவு

webteam

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இரண்டாவது ஐந்தாண்டின் விமான கட்டணத்தை விட தற்போதைய பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு குறைவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண எண்ணிக்கை குறித்தும் அதற்கான கட்டணம் குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதில் நரேந்திர மோடி பிரதமரா‌‌னதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானம் மூலம் ரஷ்யா, துருக்மெனிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 44 நாடுகளுக்குச் சென்றுள்ளார். அதற்கான விமானச் செலவு ரூபாய் 443.4 கோடி என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதேபோல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இரண்டாவது ஐந்தாண்டு (2009 -2014) ஆட்சி காலத்தில் 38 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான செலவு 493.22 கோடி ரூபாய் என ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், மோடி சென்றதை விட சுமார் 50 கோடி ரூபாய் ‌அதிகம் எனவும் ஏர் இந்தியா விமான நிறுவனம் ‌தெரிவித்துள்ளது. 

மேலும் ஜப்பான், சிங்கப்பூர், மாலத்தீவு, அர்ஜென்டினா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ததற்கான கட்டணத் தொகை இன்னும் செலுத்தவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.