இந்தியா

ஒரு ரூபாய்க்கு சுவிதா நாப்கின் - ரூ.12 ஆயிரம் கோடி நிதியுதவி செய்ய மத்திய அரசு திட்டம்?

ஒரு ரூபாய்க்கு சுவிதா நாப்கின் - ரூ.12 ஆயிரம் கோடி நிதியுதவி செய்ய மத்திய அரசு திட்டம்?

webteam

சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு சுவிதா சானிட்டரி நாப்கின் திட்டம் பற்றிப் பேசினார். தற்போது மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் முயற்சியை ஊக்குவிக்க ரூ. 12 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய செய்தியை தி பிரிண்ட் இணையதளம் வெளியிட்டுள்ளது.

வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் இரண்டு உயரதிகாரிகள் சுவிகா திட்டத்திற்கு நிதியளிக்கும் தகவலை உறுதி செய்துள்ளார்கள். பிரதமரின் ஜனாசாதி பரியோஜனா திட்டத்திற்கான ஏஜென்சியாக செயல்படும் வேதியியல் அமைச்சகத்தின் இயங்கும் பார்மாசூட்டிக்கல்ஸ் துறை மூலம் மலிவு விலை நாப்கின்கள் விற்கப்படும்.

ஆகஸ்ட 15 ம் தேதியன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்தில் அரசு செய்துவரும் முயற்சிகளில் மிக முக்கியமானது இந்த சுவிதா நாப்கின் திட்டம் என்று குறிப்பிட்டார். இந்த சுவிதா நாப்கின்கள் கடந்த 2018ம் ஆண்டில் 2.5 ரூபாய்க்கு விற்கப்பட்டன. ஆனால், 2019 ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது.

"இந்தியாவில் சானிட்டரி நாப்கின்களின் மாதாந்திர பயன்பாடு 500 கோடி யூனிட்டுகளாக உள்ளன. ஒரு நாப்கினை தயாரிக்க மதிப்பிடப்படும் உற்பத்தி செலவின் அடிப்படையில், திட்டத்தின் செலவு ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் " என அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், சுவிதா திட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை பங்குதாரர்களாக சேர்க்கும் முயற்சிகளும் தொடங்கியுள்ளன.