இந்தியா

டிஜிட்டல் ஊடகங்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதா

jagadeesh

செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்களை முறைப்படுத்த புதிய வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1867-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட புத்தகங்கள் மற்றும் பத்திரிகை பதிவு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் வகையில், ‌மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பல்வேறு திருத்தங்களுடன் புதிய வரைவு மசோதாவை தயாரித்தது. அதில், டிஜிட்டல் ஊடகங்களை முறைபடுத்துவது தற்போது நடைமுறையில் இருக்கும் ஊடக குற்றங்களுக்கு, பதிப்பாளர்களுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனையை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த மசோதாவை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இந்த வரைவு மசோதா ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகை, பருவ இதழ், டிஜிட்டல் ஊ‌டகங்களின் பதிப்பாளர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த ஒரு மாதத்திற்குள் தெரிவிக்கலாம் என தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.