இந்தியா

“முன்னாடி வந்து பாருங்க” - ட்ரம்ப்புக்கு குரங்கு பொம்மைகளை விளக்கிய பிரதமர் மோடி

“முன்னாடி வந்து பாருங்க” - ட்ரம்ப்புக்கு குரங்கு பொம்மைகளை விளக்கிய பிரதமர் மோடி

webteam

சபர்மதி ஆசிரமத்தில் மூன்று குரங்கு பொம்மைகள் சொல்ல வருவது என்ன என்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கி கூறினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரும் வந்துள்ளனர். பகல் 11.40 மணியளவில் அகமதாபாத் விமானநிலையம் வந்த ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் அவரது மனைவி மற்றும் மகளை கைக்குலுக்கி வரவேற்றார். இதையடுத்து அங்கிருந்து ட்ரம்ப்பும், மெலனியாவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை புரிந்தனர்.

அங்கு காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப், காந்தி சுற்றிய ராட்டையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தார். பின்னர், அங்கு ‘ தீயதை பேசாதே, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே’ என்ற கருத்தினை வெளிப்படுத்தும் குரங்கு பொம்மைகள் குறித்து மோடி தெளிவுப்படுத்தினார். இதை ஆச்சரியத்துடன் ட்ரம்ப்பும் மெலனியாவும் குரங்கு பொம்மைகளுக்கு பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது முன்னால் வந்து பாருங்கள் என்று மோடி அழைக்க இருவரும் குரங்கு பொம்மைகளின் முன்புறம் வந்து ரசித்தனர்.