மோடி PT
இந்தியா

”மக்களின் சொத்துக்களை காங்கிரஸ் அபகரித்துவிடும்” - மோடி Vs ராகுல்.. முற்றும் வார்த்தைப்போர்!

”மக்களின் பணம் ரூ.16 லட்சம் கோடியை 5 பணக்காரர்களிடம் மோடி கொடுத்தார். அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து 90 சதவீத மக்களுக்கு கொடுப்போம்.” பிரதமரின் குற்றச்சாட்டிற்கு ராகுல் விளக்கம்.

PT WEB

மக்களின் சொத்துக்களை காங்கிரஸ் அபகரித்துவிடும் என்று பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அந்த குற்றச்சாட்டுகளையும், அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி அளித்த பதில்களையும் பார்க்கலாம்...

சத்தீஸ்கர் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பேசியபொழுது,

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை குறைத்து, அபகரித்து காங்கிரஸ் அதன் ஆதரவாளர்களுக்கு கொடுத்துவிடும். அம்பேத்கர் கொண்டுவந்த சட்டத்தில் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை நீக்கிவிடும்.” என்றார்.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பங்கேற்று பேசியபொழுது,

எந்தவித அதிகாரப் பதவியிலும் பட்டியலினத்தவரோ, பழங்குடியினரோ இல்லை. உயர் பதவியிலும் இல்லை. ஊடகம், மருத்துவமனை, பெரிய நிறுவனங்கள் என எங்கு பார்த்தாலும் அவர்கள் இல்லை. அதாவது 90 சதவீதம் இல்லை.” என்றார்

நரேந்திர மோடி, பிரதமர் பேசியபொழுது

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. என்னவென்றால், தேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டையும், அலமாரியையும், ஒவ்வொரு நபரையும் எக்ஸ்ரே செய்து, அவர்கள் வைத்திருக்கும் கொஞ்சத்திற்கும் (சொத்து) காங்கிரஸ் வரியை விதிக்கும்.

ராகுல்காந்தி:-

”எங்கள் தேர்தல் அறிக்கையை நன்றாக கவனியுங்கள். உங்களுக்கே தெரியும், அது நன்றாக உள்ளதென்று. அதில் எக்ஸ்ரே உள்ளது. அது என்னவென்றால், மக்களின் பணம் ரூ.16 லட்சம் கோடியை 5 பணக்காரர்களிடம் மோடி கொடுத்தார். அந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து 90 சதவீத மக்களுக்கு கொடுப்போம்.

நரேந்திர மோடி:-

உங்களது உழைப்பால் சம்பாதித்த சொத்தை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க முடியாது. காங்கிரஸ் அதை பறித்துவிடும். ஊழலும் செய்யும். காங்கிரஸின் மந்திரமே ஊழல்தான். இறந்தாலும், உயிரோடு இருந்தாலும் செய்வார்கள்.”

ராகுல்காந்தி:-

நான் உங்களுக்கு முதலில் சொன்னது போலவே காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது அரசியலுக்காக அல்ல. அது எங்களுடைய வாழ்வின் இலக்கு. இது எங்களது கேரண்டி. நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை நாங்கள் நிறைவேற்றுவோம். ”

இவ்வாறு தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகிறார்கள்