நாடளுமன்ற கூட்டத்தொரடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பங்கேற்கும் முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் தங்களது பழைய புகார்கள் அனைத்தையும் விட்டுவிட்டு உற்சாகமான முறையிலே புதிய நாடளுமன்ற கட்டடத்திற்கு செல்ல வேண்டும். அங்குவைத்து நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது குறித்து விவாதிக்க வேண்டும்.
சந்திராயன் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய விஞ்ஞானிகளுக்கும், ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
இத்துடன் விஸ்வகர்மா திட்டமும் வெற்றியடைந்துள்ளது. நாட்டில் உற்சாகமான சூழல் நிலவிவரும் இச்சூழலில், 5 நாட்களுக்கு மட்டுமே நடைபெற இருக்கும் இந்த குறுகிய நாடாளுமன்ற கூட்டுத்தொடரானது மிகவும் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
இந்த நேரத்தில் நாம் நமது பழைய விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு 2047 ஆம் ஆண்டுக்குள், அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்து 100 வருடங்களுக்குள் நமது நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கவேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மக்களவை சென்ற பிரதமர், அங்கு முதல் நபராக பேசிவருகிறார்.