இந்தியா

ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து அந்தமானில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து அந்தமானில் 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்

சங்கீதா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைத் தெடர்ந்து அந்தமான் அருகே அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவானது. நண்பகல் 12.12 மணியளவில் பதிவான நிலநடுக்கமானது 5 கி.மீட்டர் ஆழத்தில் மையாக கொண்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. இந்நிலையில் அந்தமான் அருகே தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது.

போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிலோமீட்டர் தொலைவில் பிற்பகல் 2 . 06 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் குறைந்த வீரியத்துடன் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

கடந்த சில நாட்களாக தெற்கு ஆசியாவில் நிலநடுக்கங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தெற்கு ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று இந்தியாவில் தொடர்ச்சியாக இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.