இந்தியா

அசாம் முதல்வர் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு

அசாம் முதல்வர் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு

jagadeesh

அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 6 உயர் அதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கொலை செய்ய முயற்சித்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மிசோரம் எல்லை கிராம மக்கள் மற்றும் அசாம் எல்லை கிராம மக்களுக்கு இடையே சில நாட்களுக்கு முன் நடந்த மோதலின்போது, அசாம் காவலர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பதற்றம் தணியாத நிலையில், மிசோரம் காவல்துறையின் நடவடிக்கை அசாதாரண சூழலை மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.

இதற்கிடையே, மிசோரமுக்கு செல்ல வேண்டாம் என அசாம் அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், வடகிழக்கு இந்தியா ஒன்றாகவே இருக்கும் என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா தெரிவித்துள்ளார்.