திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி பெங்களுரூவில் மீட்கப்பட்டார்.
ஏழுமலையான் கோவில் அருகே டீக்கடையில் பணியாற்றி வரும் சுரேஷ் என்பவரின் 7 வயது மகள் நந்தினி கோவில் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது கடந்த 23ம் தேதி காணாமல் போனார். இது தொடர்பான புகாரில் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் 14 குழுக்கள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலை வைத்து ஆய்வாளர் ராமகிருஷ்ண தலைமையிலான காவல்துறையினர் நேற்று பிற்பகல் பெங்களூரு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சி.வி. ராம்நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் மனைவி ஷாலினியிடம் சிறுமி நந்தினி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமி நந்தினியை மீட்டு திருமலைக்கு அழைத்து வந்த காவல்துறையினர் பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். சிறுமி நந்தினியை கடத்தி சென்ற ஷாலினி கைது செய்த போலீசார், அவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலைச் சேர்ந்தவரா? உடல் உறுப்புக்களை விற்கும் கும்பலைச்சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்யப்படுவார்கள் எனவும் திருப்பதி எஸ்.பி. அபிஷேக் மஹந்தி தெரிவித்தார்.