இந்தியா

உ.பி. அமைச்சரின் பாதுகாப்பு கார் மோதி சிறுவன் உயிரிழப்பு

உ.பி. அமைச்சரின் பாதுகாப்பு கார் மோதி சிறுவன் உயிரிழப்பு

rajakannan

உத்தரபிரதேசத்தில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி 8 வயது சிறுவன்  உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். இவர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் கோண்டா மாவட்டத்தின் பரஸ்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன. அப்போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். 

இதனை கண்டதும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மகன் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டதாக பலியான சிறுவனின் தந்தை தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர் யோகி, விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.