ஸ்மிருதி இரானி pt web
இந்தியா

பாஜக-வின் Star Candidates.. தோல்வியைத் தழுவிய ஒரே அமைச்சர்!

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவில் தற்போது பதவியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் போட்டியிட்ட நிலையில், கிட்டத்தட்ட எல்லா star candidateகளும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தோல்வியைத் தழுவிய ஒரே அமைச்சராக ஸ்மிருதி இரானி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்முகப் பிரியா . செ

பிரதமர் மோடி

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி 2,40,000 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் அஜய் ராயை விட 1,44,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Modi & Amit shah

அமித்ஷா

குஜராத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா 6.15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நிதின் கட்கரி

நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, 6,60,000 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் விகாஸ் தாக்கரேவை விட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பியூஸ் கோயல்

பியூஸ் கோயல்

மும்பை (வடக்கு) தொகுதியில் போட்டியிட்ட மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் 5,40,000 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பூஷன் பட்டேலை விட 2,65,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மன்சுக் மாண்டவ்யா

குஜராத்தில் உள்ள போர்பந்தர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவ்யா 62 லட்சம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போடியிட்ட லலித் வசோயாவை விட 3 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அனுராக் தாக்குர்

அனுராக் தாக்கூர்

இமாச்சலப் பிரதேசர்த்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்ட செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் 5 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் சட்பல் ரைசதாவை விட 1,70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்மிருதி இரானி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கிஷோரி லால் சர்மாவைவிடம் 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.

ஸ்மிருதி இரானி

ராஜ்நாத் சிங்

லக்னோவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3,34,664 பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் ரவிதாஸ் மெஹ்ரோத்ராவை விட 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.