மாநிலங்களவையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார்.
அவைக் காவலர்கள்தான் தங்களை பிடித்து இழுத்தனர் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவலை கூறுவதாகவும் அவையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு மூலம் இதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறினார். இவ்விவகாரத்தில் மாநிலங்களவை தலைவர் சிறப்பு கமிட்டி ஒன்றை நியமித்து அதன் மூலம் ஒழுங்கீனமான உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் பெண் காவலர் ஒருவரின் கழுத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நெரித்ததாக அமைச்சர் பியுஷ் கோயல் குற்றஞ்சாட்டியுள்ளார்.