இந்தியா

'பிக் பாஸ்'-லிருந்து இவரை நீக்குங்க! - மகளிர் ஆணைய தலைவர் கோரிக்கை! காரணம் இதுதான்!

'பிக் பாஸ்'-லிருந்து இவரை நீக்குங்க! - மகளிர் ஆணைய தலைவர் கோரிக்கை! காரணம் இதுதான்!

Abinaya

இந்தியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து திரைப்பட தயாரிப்பாளர் சஜித் கானை வெளியேற்ற வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

#MeToo இயக்கத்தின் போது பல பெண்களால் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட , திரைப்பட தயாரிப்பாளர் சஜித் கானை ரியாலிட்டி ஷோ பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியில் பிக்பாஸ் 16வது சீசனினை எட்டியுள்ளது. 16வது சீசனின் முதல் எபிசோட் அக்டோபர் 1ம் தேதி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.

“#MeToo இயக்கத்தின் போது 10 பெண்கள் சஜித் கான் மீது பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த புகார்கள் அனைத்தும் சாஜித்தின் கேவலமான மனநிலையை காட்டும். இப்போது இந்த மனிதருக்கு பிக்பாஸ்ஸில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது, அது தவறு விசயம். நான் அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நிகழ்ச்சியில் இருந்து சஜித் கானை நீக்கி விடுங்கள்” என்றுள்ளார்.

சஜித் கான் மீது பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளைக் கூறியதை அடுத்து, 2018 ஆம் ஆண்டில் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம் (IFTDA) ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டில், தொடக்கத்தில், அவர் “ஹவுஸ்ஃபுல் 4” இயக்குனர் பதவியிலிருந்தும் விலகினார், அவருக்குப் பதிலாக ஃபர்ஹாத் சம்ஜி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவாலின் கோரிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.