தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் முகநூல்
இந்தியா

“தீபாவளி பண்டிகைக்காக 7,000 சிறப்பு ரயில்கள்” - மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்!

தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

PT WEB

தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக தினமும் 2 லட்சம் பயணிகள் ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அவர்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த ஆண்டு 7 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு தீபாவளி மற்றும் சத் பூஜைக்காக 4,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், பண்டிகைக்காலம் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்தமுறை கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதவிர, பல ரயில்கள் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.