இந்தியா

ராணுவ வீரர்களுக்கு புரோட்டீன் உணவு வழங்கப்படும் - ஜெட்லி

ராணுவ வீரர்களுக்கு புரோட்டீன் உணவு வழங்கப்படும் - ஜெட்லி

webteam

ராணுவ வீரர்களுக்கு இந்தாண்டு முதல் புரோட்டீன் சத்துமிக்க சிக்கன் பிஸ்கட், மட்டன் ரொட்டிகள் வழங்கப்படும் என பாதுகாப்பு துறை மந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

எல்லையில் கடும் குளிர் மற்றும் மோசமான சீதோஷண நிலையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) தயாரித்து வழங்கிவருகிறது. இந்நிலையில் இந்தாண்டு முதல் புரோட்டீன் சத்து மிக்க உணவு வகைகள் ராணுவ வீரர்களுக்கு தயாரித்து வழங்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அருண் ஜெட்லி தாக்கல் செய்த அறிக்கையில், “ராணுவ வீரர்களுக்கான இந்தாண்டு உணவு வகைகளில் புதிதாக சிக்கன், முட்டை பிஸ்கட்கள், தானிய வகை, மட்டன் ரொட்டிகள், இரும்பு மற்றும் புரதச்சத்து மிக்க வகையான உணவுகள் தயாரித்து வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர்களின் தேவைக்கேற்ப இந்த உணவு வகைகள் டி.ஆர்.டி.ஓ.வால் தயாரித்து வழங்கப்படும் எனவும் அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.