இந்தியா

“மதிய உணவு திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்” - ஐ.நா.வின் பிஷோ பராஜுலி

“மதிய உணவு திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்” - ஐ.நா.வின் பிஷோ பராஜுலி

EllusamyKarthik

பசியால் வாடும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டதுதான் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம்.

இந்தத் திட்டத்திற்கான இந்திய நாட்டு இயக்குனர் மற்றும் பிரதிநிதி பிஷோ பராஜுலி இந்தியாவில் மதிய உணவுத் திட்டத்தை பள்ளிகளில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் வாக்கில் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த அக்டோபர் தொடங்கி பள்ளிகள் சில மாநிலங்களில் இயங்க ஆரம்பித்தன. இந்நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் பிஷோ பராஜூலி. 

“நம் நாட்டில் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டம் என்பது மில்லியன் மில்லியன் கணக்கான பள்ளி மாணவர்களின் உணவுக்கான அடிப்படை ஆதாரமாக உள்ளது. அது அவர்களது அன்றாட உணவில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் மீண்டும் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முக்கியமாக சூடான சமைத்த உணவை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அது அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கும்” என சொல்லியுள்ளார் அவர்.