இந்தியா

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் !

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயம் !

rajakannan

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் வெளியிட்டார்.

புதிய விதிகள் படி சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரத்தை கண்காணிக்கும் பணிகளை மட்டும் சிபிஎஸ்இ நிர்வாகம் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவகாரங்களை அந்தந்த மாநில அரசுகளே கவனித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரும் நடைமுறைகள் மிகவும் கடினமானதாக இருந்த நிலையில் அவை தற்போது எளிமையானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். சிபிஎஸ்இ பள்ளிகளில் விளையாட்டிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

பள்ளிக்கட்டணங்கள் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பெற்றோரிடம் மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.